அடடே... வெளுக்கப் போகுதாம் மழை! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் கன மழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களுக்கு கனமழ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை திருச்சி, மதுரை, தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 5 நாட்களுக்கு வெளுக்க போகுது மழை... லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா தெரிஞ்சுக்கோங்க!
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூரில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் புதுவை, காரைக்காலில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே குடை கொண்டு போங்க! 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...