×
 

மழை பிச்சு உதறப்போகுது! மக்களே உஷார்... வானிலை மையம் கொடுத்த புது அப்டேட்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடலோரங்கள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில், இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நவம்பர், டிசம்பரில் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... எச்சரித்த வெதர்மேன்...!

இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதக்கும் வேலூர்; வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share