#weatherupdate: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே...!
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இயல்புக்கு அதிகமாக வடகிழக்க பருவ மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 19ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் இந்த ஆண்டு வடகிழக்க பருவமழையின் போது இயல்பை விட மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவ மழை தொடர்பான அறிவிப்பில் தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்… இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என்றும் அக்டோபர் 19ஆம் தேதி 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடிய, விடிய கொட்டிய கனமழை... வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்... வெள்ளக்காடான தூத்துக்குடி...!