RAIN ALERT: குடை எடுத்தாச்சு... 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை திண்டுக்கல் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குடை எடுத்தாச்சு... 11 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை...!
திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் காலம் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 நாட்களுக்கு வெளுக்க போகுது மழை... லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா தெரிஞ்சுக்கோங்க!