கோடையில் ஜில் அப்டேட்! சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... 15 மாவட்டங்களில் மழை...
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்று சுழற்சி அடித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசுவதோடு வானம் இருட்டியது. புழுதி கிளப்பிய காற்று சுவற்றில் அடிப்பதால் சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று பலமாக வீசுவதால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.
இதையும் படிங்க: அடுத்த ஒரு மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை; மஞ்சள் அலர்ட்... கொளுத்தும் வெயிலில் கூல் அப்டேட்!!
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நியூ வானிலை அப்டேட்..!