காலையிலே அதிரடி... இந்த 17 மாவட்டங்கள் தான் குறி...!
தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்றும் 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக கோவை மற்றும் நீலகிரியில் விடிய விடிய கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிப்போர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: மக்களே பாதுகாப்பா இருங்க..! வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, மருதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: கோடை வெயிலில் கூலான அப்டேட்.. அடுத்த 2 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை; எங்கு தெரியுமா?