×
 

சென்னையில் மழை தீவிரமடையும்... நெருங்கும் புயல்! வானிலை மையம் எச்சரிக்கை...!

புயல் நெருங்கி வருவதால் சென்னையில் மழை தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக உருமாறிய நிலையில், அது தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வடமேற்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா புயல் நாளை ஆந்திரா மாநிலம் காக்கி நாடா அருகே கரையைக் கடக்கும் எனக்கூறப்படுகிறது. 

சென்னையிலிருந்து 560 கிலோமீட்டர் தொலைவில் 16 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது வரைக்கும் நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோன்தா புயல் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நாளை இரவு கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புயல் நெருங்கி வருவதால், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை தீவிரமடையும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்லில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மோன்தா புயல் சென்னையை நெருங்கியாச்சு... உஷார் மக்களே...! அடிச்சு நகர்த்தப்போகுது...!

இதற்கிடையில், கனமழை காரணமாக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... அடிச்சு நொறுக்கப்போகும் மழை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share