சில்லென மாறிய சிங்கார சென்னை.. மக்கள் ஹேப்பியா ஹேப்பி..!!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, மெரினா, கிண்டி, ஆலந்தூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தாயுமானவர் திட்டம்: வீடுகளுக்கே வரப்போகுது பொருட்கள்..!! சென்னையில் இந்த 4 நாட்களில்..
மழையால் சில இடங்களில் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டாலும், பெருநகர சென்னை மாநகராட்சி வெள்ள நீர் தேங்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மழைக்கு ஏற்ப தயாராக இருக்கவும், மாசு காற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..??