×
 

மீண்டும் அடித்து ஊற்றப்போகும் மழை!! இடி, மின்னல் கன்பார்ம்!! வந்தாச்சு வானிலை புது அப்டேட்!

தமிழகத்தில் மீண்டும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் குளிர்கால பனிமூட்டத்திற்கு பிறகு மீண்டும் மழை திரும்பி வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று (ஜனவரி 20) முதல் 22-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் 23-ஆம் தேதி முதல் மழை தீவிரமடையும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24-ஆம் தேதி கடலோர தமிழகம், உள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: ஜனவரியிலும் மழை பெய்யும்!! விவசாயிகளே உஷார்!! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்!

25 மற்றும் 26-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இடி மின்னல் மற்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை நகரத்தைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நீடிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் அளவில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்று மதியத்துடன் முடிந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஊத்து பகுதியில் 20 மி.மீ., நாலுமுக்கு மற்றும் காக்காச்சி பகுதிகளில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை தொடரும் நிலையில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் தமிழகம் முழுவதும் மழை எப்படி பரவும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!! தமிழகத்தில் மீண்டும் கனமழை!! வெதர் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share