திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா... ஓடும் பேருந்தில் அவலம்...!
வேப்பனஹள்ளி நகர அரசு பேருந்தின் அவல நிலை - ஓடும் பேருந்தில் கொட்டிய மழை நீரால் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் இருந்து வேப்பனஹள்ளி நோக்கி இன்று மாலை 48 நம்பர் கொண்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது. இன்று மாலை கிருஷ்ணகிரியில் இருந்து வேப்பனஹள்ளி நோக்கி சென்றபோது இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
அப்போது பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்தின் நான்கு புறமும் கொட்டியதால் பேருந்து பயணித்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் அனைத்து இருக்கைகளிலும் மழை நீர் கொட்டியதால் பயணிகள் அமர முடியமால் நின்று கொண்டு பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: காவலரின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம்...போலீஸ் வலையில் சிக்கிய இளம்பெண்!
இதனால் பேருந்தில் இருந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நகர பேருந்தின் இந்த அவல நிலை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பயணி ஒருவர் எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதை அதிக அளவில் ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா என கலாய்த்து வருகின்றனர்.
இதேபோல் திருவண்ணாமலையிலும் அரசு பேருந்துக்குள் மழை நீர் கொட்டித்தீர்க்கும் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை திராவிட மாடல் அரசு என்ற ஹேஷ்டேக் உடன் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், திமுக அரசு மீது சகட்டுமேனிக்கு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
#திராவிட_மாடல்
— Praveen Kumar G.L🧡💚 (@praveen_kgl) April 15, 2025
அரசுப் பேருந்து மேற்கூரை வழியாக ஒழுகிய மழைநீர்..
வீடியோ எடுத்து வெளியிட்ட பயணி...#tiruvannamalai | #govtbus | pic.twitter.com/MoU8mNvhdP
இதையும் படிங்க: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி... பிரபல இயக்குனர் காலமானார்..!