#BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!
வெளிநாடு செல்லத் தடை என்ற நிபந்தனையுடன் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜியிடம் பெறப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் அடிப்படையில், அவரிடம் இருந்து பாஸ்போர்ட் பெறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!
இந்நிலையில், அந்த பாஸ்போர்ட்டை ராஜேந்திர பாலாஜியிடம் திரும்ப ஒப்படைக்கலாம் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில், நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
இதனால், வெளிநாடு செல்லத் தடை என்ற நிபந்தனையுடன் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள உட்பட 8 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த இரு வழக்குகளிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த இரு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, செப்டம்பர் 2-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தியதால் தனது பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கில் இன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கந்தகுமார் உத்தரவிட்டார். இதனிடையே, ஆவின் முறைகேடு வழக்கு செப்டம்பர் 17-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!