×
 

திமுக கூட்டணியில் பிளவு..! தேமுதிக எங்க பக்கம் தான்... ராஜேந்திர பாலாஜி கணிப்பு..!

திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக பொறுப்பேற்பார் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுகவின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களோடும் செயலாற்றி வரும் நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேர் இன்று திமுகவில் இணைந்த நிலையில் இதனை தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்தின் முடிவை பின்பற்றி தேமுதிக., அதிமுகவின் பக்கம் தான் வருவார்கள் என்றும் தான் இருக்கும் வரை திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த் எனவும் தெரிவித்தார். பிரேமலதா தனது கணவரின் கொள்கைக்கு எதிராகவோ தனது இயக்கத்தை நிறுவிய விஜயகாந்த் எண்ணங்களுக்கு எதிராகவோ செல்ல மாட்டார் என்று உறுதிப்படக் கூறியுள்ளார். 

கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து மோதல் இருப்பதாகவும், ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பகிரங்கமாக குரல் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமக... டெல்லி விரையும் இபிஎஸ்..! அமித் ஷா உடன் முக்கிய ஆலோசனை. !

தி.மு.க. கூட்டணி பிளவு ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்த ராஜேந்திர பாலாஜி, உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும் என்றும் அதைத்தான் பொதுமக்கள் விரும்புவார்கள் எனவும் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்., இதற்கான நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிச்சாமி முழு முயற்சியோடு ஈடுபடுவார் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: அதிமுகவுடன் களமிறங்கிய பாமக…! கூட்டணியை உறுதி செய்த இபிஎஸ் - அன்புமணி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share