×
 

ராஜ்யசபா சீட்டுக்கு முந்தும் காங்கிரஸ்!! விஜய் யோசனை! ப.சிதம்பரத்தை தொடர்ந்து கிரிஷ் சோடங்கரும் அழுத்தம்!

த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்த காரணமாக இருந்த, காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, அந்த பதவியை கைப்பற்ற காய் நகர்த்தி வருகிறார் .

தமிழக அரசியலில் ராஜ்யசபா தேர்தலை ஒட்டி புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாகியுள்ள அந்த ஒரு ராஜ்யசபா இடத்துக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

தற்போதைய அரசியல் கணக்கீடுகளின்படி, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுடன் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பது குறித்து முதல்வரும், த.வெ.க. தலைவருமான விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே நேரத்தில், த.வெ.க. அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் காங்கிரஸ் கட்சியும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கூட்டணி அரசியலில் தனது பங்கிற்கு அங்கீகாரமாக இந்த ராஜ்யசபா இடம் காங்கிரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி நிர்வாகிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எடப்பாடியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டாரா..? உண்மையைப் போட்டு உடைத்த அதிமுக..!

குறிப்பாக, த.வெ.க. மற்றும் காங்கிரஸ் இடையிலான அரசியல் நெருக்கத்தை உருவாக்க முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படும் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் பெயர் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்குள் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராஜ்யசபா தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னைக்கு வந்து, ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு குறித்து முதல்வர் விஜய்யுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா இடத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவை பார்த்து கத்துக்கோங்க விஜய்..! முதல்வருக்கு நயினார் அறிவுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share