×
 

அன்புமணி மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்...

அன்புமணி மீது பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான பாமக சிறப்பு பொதுக்கூட்டத்தில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர் மீது பதினாறு குற்றச்சாட்டுகளை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைத்தனர். அதன் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். 

1)புத்தாண்டு கூட்டத்தின் போது ராமதாஸ் முன்னிலையில் மைக்கை தூக்கி போட்டதோடு, கட்சியை பிளவுபடுத்தும் வகையில் அன்புமணி பேசினார்.

2)ராமதாஸ் அழைப்பு விடுத்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்க கூடாது 108 பேரில் 100 மா.செ.க்களை அன்புமணி தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!

3) பாட்டாளி சமூக ஊடக பேரவையில் சிலரை கைக்குள் வைத்துக் கொண்டு ராமதாஸ் மற்றும் அவரை சார்ந்து இருப்பவர்களை பற்றி அநாகரிக விமர்சித்தார்.

4)ஆளுமை மிக்க நபர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது ராமதாஸ் ஏற்ற நிலையில், அன்புமணி ஏற்க மறுத்து உதாசீனம் செய்தார்.

5)தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் இருக்கைக்கு அருகிலேயே ஒட்டு கேட்பு கருவி வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

6)அன்புமணி தூண்டுதலின் பேரில் சிலர் ஐயாவிற்காக வேண்டுவதை போல் நடித்தது, ஒழுங்கீனமான அநாகரிகமான செயலாக கருதுகிறது.

7) ராமதாசிடம் அனுமதி பெறாமல் உரிமை மீட்பு நடை பயணம் சென்றதை ஒழுங்கு நடவடிக்கை குழு கபட நாடகமாக பார்க்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

8)தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாசை சந்திக்க செல்பவர்களை தொடர்பு கொண்டு பணம் பதவி ஆசை காட்டி பனையூருக்கு கடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9)தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தக்கூடாது என ராமதாஸ் பலமுறை வலியுறுத்திய பிறகும் அதை கொச்சைப்படுத்தி இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10) ராமதாசால் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியில் ராமதாஸ் அவர்களின் நிகழ்வுகளை, முகத்தை காட்டாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

11) பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தொடங்கிய பசுமை தாயகம் அமைப்பை கைப்பற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12)ராமதாசிடம் அனுமதி பெறாமல் பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி, தனி இருக்கை அமைத்து விமர்சித்தது மன்னிக்க முடியாத குற்றம். 

13) சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்ட பாமக தலைமை அலுவலகத்தை ராமதாசுக்கு தெரியாமல் தி.நகருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

14) 30/5/2025க்கு பின்னர் ராமதாசின் அனைத்து நியமனங்களும் செல்லும்; அன்புமணி நியமனங்கள் செல்லாது என தீர்மானிக்கப்பட்டது.

15) பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களிடம் அன்புமணி 40 முறை பேசியதாக பொதுவெளியில் பொய் பேசியதாக கூறப்பட்டுள்ளது.

16! எம்எல்ஏக்கள் ஜிகே மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பிரார்த்தனை செய்வதாக கேலி செய்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: நாடாளுமன்றம் போய் என்னத்த பண்ணீங்க? அன்புமணியை கேள்விகளால் துளைத்த MRK

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share