×
 

சோலி முடிஞ்சுது! அன்புமணி இடத்தில் ஸ்ரீகாந்தி... ராமதாஸ் பொதுக்குழுவில் பரபரப்பு

ராமதாஸ் தரப்பில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி அமர்ந்த இடத்தில் ஸ்ரீகாந்திக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடியது. புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வருகிறது. ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழுவில் அவரது மகள் ஸ்ரீகாந்திக்கு மேடையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. ராமதாஸின் அருகிலேயே குறிப்பாக அன்புமணி எப்படி அமருவாரோ அதேபோல ஸ்ரீகாந்தியும் அமர்வதற்கு இருக்கை அமைக்கப்பட்டது.

கடந்த முறை பொதுக்குழு நடந்த போது ராமதாஸிற்கு அருகில் அன்புமணி அமர்ந்திருந்தார். இந்த முறை தந்தைக்கு மகனுக்கும் பிரச்சனை வெடித்த நிலையில் ஸ்ரீகாந்தி அந்த இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

அன்புமணி அமர்ந்திருந்த இடத்தில் தற்போது அவரது சகோதரி ஸ்ரீகாந்தி அமர வைக்கப்பட்டுள்ள சம்பவம் அன்புமணிக்கு மாற்று ஸ்ரீகாந்தி என்ற பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஏற்கனவே அன்புமணிக்கு பதிலாக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியை கட்சிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: படியேறி வந்த அன்புமணி... மனசு இறங்காத ராமதாஸ்... ஒற்றை வார்த்தையில் ஜோலியை முடித்த பாமக நிறுவனர்...!

இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் நடைபெறும் பொதுக்குழுவில் அவரது மகள் ஸ்ரீகாந்திக்கு மேடையில் இருக்கை அமைக்கப்பட்டு இருப்பது அதனை உறுதி செய்யும் வகையிலேயே இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. மேலும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, ஐயாவின் முடிவே இறுதி என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கூட்டத்தில் பாமகவினர் பங்கேற்று உள்ளனர். ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 4000 மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸின் செயல் தலைவர் பதவியும் பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர மாட்டாராம்! நீதிபதிக்கே கடிதம் எழுதிய விவகாரம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share