×
 

ஐயாவைப் பார்த்துக்க துப்பில்ல… சும்மா பேசிக்கிட்டு... அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி

ஐயாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை என அன்புமணிக்கு ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் உள்ளே நீண்ட காலமாக நீடித்து வரும் உள் மோதல்கள், தந்தை - மகன் இடையேயான கருத்து வேறுபாடுகளாக மாறி சமீபத்தில் மிகவும் கடுமையான வடிவத்தை அடைந்துள்ளன. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான இந்தப் பிளவு, கட்சியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, அரசியல் வட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, சமீபத்தில் உடல்நல குறைவால் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது குறித்து சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று அன்புமணி பேசியபோது கருது தெரிவித்தார். ஐயாவுக்கு 87 வயதை எட்டிவிட்டதால் சாதாரண பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் திட்டமிட்ட பரிசோதனை தான் என்று கூறினார்.

ஆனால் ஒரு சிலர் ஐயாவை பார்க்க வரச்சொல்லி அழைத்ததாகவும் பாதுகாப்பே இல்லாமல் யார் யாரோ சென்று பார்ப்பதாகவும் வீட்டில் இருக்கும்போது ஐயாவின் பாதுகாப்பு கருதி வராண்டாவை தாண்டி யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இது என்ன கண்காட்சியா என்றும் அவரது பாதுகாப்பு முக்கியம் எனவும் அவரை வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஐயாவிற்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன் அவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் கூறியிருந்தார். 

இதையும் படிங்க: தயவு செஞ்சி வராதீங்க... அன்புமணி தலையில் இடியை இறங்கிய ஜி.கே.மணி...! 

ஐயாவிற்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன் என பேசிய அன்புமணிக்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார். ஐயாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை என ராமதாஸ் காட்டமாக தெரிவித்தார். மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான் என்று தெரிவித்தார். என்னை தலைவர்கள் வந்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார். 

இதையும் படிங்க: விஜயால் வந்த வினை... அன்புமணிக்கு அனுமதி மறுப்பு... பாமகவிற்கு பேரதிர்ச்சி கொடுத்த காவல்துறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share