தரமான கூட்டணி இருக்கு! தளராம இருங்க... தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் நம்பிக்கை
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடியது. புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
பாமக சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார். இன்று கூடிய பொதுக்குழு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் என்றும் இது காசு கொடுத்து சேர்ந்த கூட்டம் அல்ல தானாக சேர்ந்த கூட்டம் என்றும் தெரிவித்தார். பாமகவின் நிகழ்காலம், எதிர்காலம் அனைத்துமே தொண்டர்கள்தான் என்று கூறினார்.
தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணியை அமைக்கப் போவதாக உறுதியளித்தார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வன்னியர் சமுதாயத்திற்கு மட்டுமல்ல எல்லா மக்களுக்குமானது என்றும் தேர்தலில் நல்ல கூட்டணியை ஏற்படுத்துவோம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் என் மகன்.. அன்புமணியை கடுமையாக சாடிய ராமதாஸ்..!!
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை முதலமைச்சரின் நினைத்தால் வழங்கலாம் எனவும் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றுக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மக்களுக்கானவை என்று தெரிவித்தார். தொண்டர்கள் மனதில் இருப்பது என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என ராமதாஸ் தெரிவித்தார். பாமகவின் கோரிக்கையான 10.5% உள் ஒதுக்கீடு நிச்சயம் நிறைவேறும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ராமதாஸ் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி.. கிளியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு..!!