விடிந்ததுமே ஷாக்... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புதிய விண்ணப்பம்... அன்புமணி தலையில் இறங்கியது இடி...!
புதிய கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணயத்தில் ராமதாஸ் தரப்பினர் விண்ணப்பம். அய்யா பாமாக்க என்ற புதிய கட்சியை பதிவு செய்ய ராமதாஸ் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அய்யா பாமக என்ற ஒரு புதிய கட்சியை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் தரப்பு விண்ணப்பம் அளித்திருக்கிறது. தமிழகத்தில் அரசியல் களம் ஏற்கனவே உச்சக்கட்ட கொதிநிலையில் உள்ளது. திமுக + கூட்டணி, அதிமுக + கூட்டணி, நாதக, தவெக என 4 முனை போட்டி நிலவி வந்த நிலையில், ராமதாஸும், சசிகலாவும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியோடு தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனால் வர உள்ள சட்டமன்ற தேர்தல் 5 முனை போட்டியாக மாறியுள்ளது. வி.கே.சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததோடு, தென்னந்தோப்பு சின்னத்தையும், தனி கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டார். ஆனால் ராமதாஸ் தரப்போ கட்சியும் இல்லாமல், சின்னமும் இல்லாமல் அல்லாடி வந்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு, கட்சியின் சின்னம், கொடி மற்றும் பெயரை தனது மகன் அன்புமணி ராமதாஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ராமதாஸ் புதிய கட்சி தொடங்கும் பணிகளில் களமிறங்கியுள்ளார்.
இதையும் படிங்க: பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!
அய்யா பாமக என்ற புதிய கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணயத்தில் ராமதாஸ் தரப்பினர் விண்ணப்பம் கொடுத்திருக்கின்றனர் குறிப்பாக ஐயா பாசறை மக்கள் கட்சி என்பதன் சுருக்கமே அய்யா பாமக என்பதன் விளக்கமாகும். ராமதாஸ் ஆதரவாளரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலைய முதன்மை செயலாளராக இருந்த அன்பழகனின் மகன் முகிலனை தலைவராக கொண்ட இந்த கட்சியை பதிவு செய்ய ராமதாஸ் பரத்தினர் தற்போது தேர்தல் ஆணயத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமதாசை பற்றி அப்படி பேசாதீங்க..! 85 வயசுலையும்... மனம் திறந்த சீமான்..!!