“பை நிறைய பொய்” - அன்புமணியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்த ராமதாஸ் தரப்பு...!
அன்புமணி ராமதாஸிடம் இருப்பது வெறும் அணி தான், ராமதாஸிடம் உள்ளது தான் பாட்டாளி மக்கள் கட்சி எனத் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக மாநில ஒருங்கினைப்பாளர் கரூர் பாஸ்கரன் கூறியதாவது: அன்புமணியின் வழக்கறிஞர் என்று பேசும் பாலுவிற்கு அன்பான வேண்டுகோளை வைப்பதாகவும், பாலு வாத திறமையெல்லாம் பயன்படுத்தி அன்புமணி மீதான ஊழல் குற்றச்சாட்டின் வழக்கில் ஆஜராகி வெற்றியை தேடி தர வேண்டுமெனவும் கோரிக்கை வைப்பதாகவும், வன்னியர் சங்க கூட்டத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுகீட்டில் பெறுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கலந்தாசிக்க உள்ளோம். அன்புமணி ராமதாஸிடம் இருப்பது வெறும் அணி தான், ராமதாஸிடம் உள்ளது தான் பாட்டாளி மக்கள் கட்சி எனத் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.மணி தேர்தல் ஆணையத்தில் பாமக தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க டெல்லி சென்றுள்ளதாகவும், அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறைகேடாக கொடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளார்கள், இவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரனும் என வலியுறுத்திய அவர் ஜிகே.மணி அமித்ஷாவை சந்திக்க செல்லவில்லை என கூறினார்.
பாமகவில் வாழ்நாள் தலைவர் யாரும் இல்லை. மூன்று வருடம் முடிந்த பிறகு அன்புமணியின் பதவி போய்விட்டது. பதவி போனதற்கு அப்பறம் பொதுக்குழுவை கூட்டுவேன் செயற்குழுவை கூட்டுவேன் என்பது ஆதரவாளர்கள் கூட்டம் தான் அது பாமகவின் பொதுக்குழு கூட்டம் இல்லை 28 க்கு பிறகு அன்புமணியின் எந்த நடவடிக்கையும் ஏற்கபடாது.
இதையும் படிங்க: அன்புமணிக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜி.கே.மணி...மோசடி பட்டியலை வெளியிட்டு அதிரடி...!
அன்புமணியிடம் உள்ள கோஷ்டிகளை நம்ப வைக்க தேர்தல் ஆணையத்தின் போலியான ஆணவங்களை காண்பித்து உள்ளார்கள். பாமகவின் ஐந்து ஆவணங்கள் ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முகவரியை வைத்து கொண்டு ஓனர் என்று சொல்ல முடியாது. அன்புமணி முகவரி மாற்றிய போது ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். பை நிறைய பொய்யை அன்புமணி தரப்பினர் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய ராமதாஸ்... சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்!