கண்மாய்கள் சீரமைப்பு, குளிர் பதன கிடங்கு.. ராமநாதபுரத்திற்கு 9 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 428 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,732 பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 176.50 கோடி ரூபாய் மதிப்பிலான 109 முடிவுற்ற பணிவுகளையும், 134.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 150 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
ராமநாதபுரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். ராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலை பகுதி நான்கு வழி தடத்திலிருந்து ஆறு வழித்தடமாக முப்பது கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என கூறினார். திருவாடனை மற்றும் ஆர்.எஸ் மங்கலம் இருக்கக்கூடிய வட்டங்களில் முக்கிய கண்மாய்கள் மேம்படுத்தப்படும் என்று கூறினார். கீழக்கரை வட்டத்தில் இருக்கக்கூடிய ஆறு கண்மாய்கள் மறு சீரமைப்பு செய்யப்படும் என தெரிவித்தார்.
கடலாடி வட்டத்தில் இருக்கக்கூடிய சிறுவாணூர் கண்மாய் 2 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், சிக்கல் கண்மாய்கள் இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்படும் என்று கூறினார். பரமக்குடி நகராட்சிக்கு நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும் என்று கூறினார். ராமநாதபுரம் நகராட்சியின் பழைய பேருந்து நிலையம் நவீனமயமாக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தார். ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் வசதிகளை மேம்படுத்தி புதிய பாடப்பிரிவுகளை தொடங்க 10 கோடி ரூபாய் செலவில் புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2 நாட்களுக்கு இது 'NO'.. போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு..!!
கீழக்கரை நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் திறக்கப்படும் என்றும் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடியும் கட்டப்படும் என்று தெரிவித்தார். கமுதி பகுதி விவசாயிகளின் நலன் கருதி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் தொழிலாக மீன் பிடித் தொழில் இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: என்ன பயமா? பதில் சொல்லுங்க முதல்வரே… கரூர் சம்பவம் குறித்து நயினாரின் நச் கேள்விகள்…!