×
 

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கலாமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது.

ராமர் பாலம், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தீவுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே அமைந்துள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மணல் திட்டுகளின் சங்கிலியாகும். இந்து புராணங்களின்படி, இந்தப் பாலம் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர், தனது மனைவி சீதையை ராவணனிடமிருந்து மீட்க இலங்கை செல்ல, வானர சேனைகளின் உதவியுடன் இந்தப் பாலத்தைக் கட்டியதாக ராமாயணம் கூறுகிறது.

இந்தப் பாலம், இந்து மக்களுக்கு புனிதமானதாகவும், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அதேநேரம், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் இது ஆதாமின் பாலம் என்று அழைக்கப்படுகிறது. அறிவியல் ரீதியாக, இது இயற்கையாக உருவான மணல் திட்டுகள் மற்றும் பவளப்பாறைகளின் அமைப்பாகக் கருதப்படுகிறது.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இந்தியாவில் மத நம்பிக்கைகளையும், அறிவியல் ஆய்வுகளையும் இணைக்கும் ஒரு சிக்கலான விவகாரமாக உள்ளது. இந்த வழக்கு, புராணங்களையும், வரலாற்றையும், நவீன அறிவியல் கோணங்களையும் ஒருங்கிணைக்க முயல்கிறது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விவாதங்களைத் தூண்டியுள்ளது. 

இதையும் படிங்க: கோவில் நிதியை கல்விக்கு USE பண்ணா என்ன தப்பு? தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி…

முன்னாள் மேல்-சபை எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை விரைவாக முடிவு செய்ய உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: 2 தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி! கொலிஜியம் பரிந்துரை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share