×
 

#BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்... இலங்கை கடற்படை அட்டூழியம்...!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை எல்லை மீறல் குற்றச்சாட்டின் பேரில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க அனுமதிச் சீட்டு பெற்று, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகை வழிமறித்து, அதிலிருந்த எட்டு மீனவர்களை கைது செய்தது.

இதையும் படிங்க: ஆழ்கடலில் இருந்து கரை திரும்பியதுமே மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... உயிருக்கு ஊசலாடும் மேலும் 3 பேர்... நடந்தது என்ன?

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தங்களது விசைப்படகு பழுதடைந்ததால் எதிர்பாராத விதமாக எல்லையைத் தாண்டி செல்ல நேரிட்டதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், அந்த விளக்கத்தை ஏற்காத இலங்கை கடற்படை, கடல் எல்லையை மீறியதாகக் கூறி ஒரு விசைப்படகையும் அதிலிருந்த எட்டு மீனவர்களையும் கைது செய்தது.

பின்னர், அவர்களிடம் முறையான விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை எல்லை மீறல் குற்றச்சாட்டின் பேரில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும், சில நேரங்களில் சேதப்படுத்துவதும், தாக்குதல் நடத்துவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொளந்தெடுக்கப்போகும் கனமழை... இன்று எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share