ராமேஸ்வரம் கோயிலில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்... ரூ.3.4 கோடிக்கு மெகா ஊழல்... ஷாக்கில் பக்தர்கள்...!
ராமநாதசுவாமி திருக்கோயில் பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி. பேஷ்கார் உள்பட ஆறு பேர் சஸ்பெண்ட். பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி.
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் 2019ம் ஆண்டு முதல் பக்தர்களிடம் விற்பனை செய்யப்படும் கோயில் பிரசாத விற்பனையை கோயில் நிர்வாகம் ஏற்று நடத்தி வருகிறது. கடந்த 2023 - 24 நிதியாண்டில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்க திட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த காலகட்டத்தில் கோயில் பிரசாத தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த இளநிலை உதவியாளர் கே.பஞ்சமூர்த்தி (பேஷ்கார்) தினசரி பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து அதனை முறைகேடாக விற்பனை ஸ்டால்களில் பக்தர்களிடம் விற்பனை செய்து சட்டவிரோதமாக மோசடி செய்து பணம் ஈட்டி வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை லட்டு பிரசாத தயாரிப்பில் திடீரென மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு குளறுபடி மோசடிகள் தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். இதில் இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி தலைமையில் ஊழியர்கள் பெரும் மோசடி நடத்தியது உறுதியானது. விசாரணையில் வெளியில் இருந்து தயாரிப்பு மூலப்பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து முறைகேடாக லட்டு தயாரித்து கவுண்டரில் விற்பனை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... முக்கிய அதிகாரி செய்த பகீர் காரியங்கள்... ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை...!
மேலும் கடந்த 2023 முதல் 2026 பிப்ரவரி மாதம் வரை 20 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக தயாரித்து கவுண்டரில் பக்தர்களிடம் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடியாக விற்பனை நடந்ததுளதாக புள்ளி விவரமாக கணக்கு பார்க்கப்பட்டது.
இந்த மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் இளநிலை உதவியாளர்கள் கே.பஞ்சமூர்த்தி (பேஷ்கார்), லாவண்யா, அம்பிகா, டிக்கெட் விற்பனையாளர் செல்வி, பணிப்பெண் சிவனேஸ்வரி, தூர்வை பணியாளர் விக்ரம் உள்ளிட்ட ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார். ராமநாத சுவாமி கோயிலில் கோடிக்கணக்கில் பிரசாதனத்தில் மோசடி நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: #BREAKING: மாணவர்களே கவனிங்க..! நீட் மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! புதுசா விண்ணப்பிக்கணுமா..?