×
 

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்... இனி இரவிலும் தடையில்லை... அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அதிரடி...! 

இனி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் வரை இரவு நேரத்தில் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இன்று காலை சரியாக 10 மணியளவில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் புதிதாக மகளிர்  விடியல் பயன CNG பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். 

இந்த விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் காலோன்  மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: தமிழக முதல்வர் ஆணைப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய பேருந்துகள் வாங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு,  750 பேருந்துகள் வாங்குவதற்கு அனுமதிகள் பெறப்பட்டு முதற்கட்டமாக 12 பேருந்துகளை இயக்குவதற்கான திட்டத்தினை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க  சி.என்.ஜி மகளிர் விடியல் பயண பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளேன். 

எதிர்காலத்தில் காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்கின்ற வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் முன்னெடுத்து வருகிறார் . அதன் ஒரு பகுதியாக இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய பேருந்துகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வருங்கால சந்ததியினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதற்கான முயற்சிகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஸ்கெட்ச் கே.என்.நேருக்கு மட்டுமில்ல... அமலாக்கத்துறை வளையத்தில் அப்துல் வஹாப்... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

தமிழக முழுவதும் மிகப்பெரிய அளவிலேயே பேருந்துகள் உள்ளதாகவும் சிறிய ரக மினி பேருந்துகள் குறைவாக இருப்பதாகவும், மேலும் தமிழகத்தில் சிறிய ரக மினி பேருந்துகளை இயக்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும் பொழுது ராமேஸ்வரத்திலும் மினி பேருந்துகள் கோவில் வரை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இரவு நேரத்தில் ராமேஸ்வரம் திருக்கோவில் வரை பேருந்துகள் இயக்கி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளை கோவில் வாசலில் இறக்கிடுவதற்கான உத்திரவாதத்தை வழங்கினார்.  ராமநாதபுரம் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் இயக்குவதற்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த மனுக்கள் மூலம் பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அதேபோல இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணியினை அதிகாரிகள் செய்து வருவதாகவும், தமிழகத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய பேருந்துகளை 750 பேருந்துகள் இயங்குவதற்கான திட்டமிடல் செய்து அதில் முதல் கட்டமாக 12 பேருந்துகளை ராமேஸ்வரம் தீவு பகுதியில் இன்று இயக்கி உள்ளாளேன் என போக்குவரத்து துறை அமைச்சர்  தெரிவித்தார்

இதையும் படிங்க: மக்களே உஷார்... இந்த வருஷம் கோடை காலம் கொடூரமா இருக்குமாம்... புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share