×
 

தாத்தா இடுப்ப புடிச்சாரு, அம்மா அழுதாங்க.. தீக்குளித்து உயிரிழந்த தாய்க்கு நேர்ந்ததை விவரித்த மகள்..!

ராமநாதபுரத்தில் வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து உயிரிழந்த தன் தாய்க்கு நேர்ந்ததை அவரது மகள் விவரித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாளியைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. ரஞ்சிதாவுக்கு முனீஸ்வரனுடன் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரஞ்சிதா வரதட்சணை கட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், தனது கணவரும் மாமனாரும் வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், இதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறி உள்ளார்.

மாமனார் மற்றும் கணவர் வரதட்சணை கேட்ட துன்புறுத்தியதாகவும், மாமனார் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் கூறியிருந்தார். உயிரிழந்த ரஞ்சிதாவின் பரபரப்பு வாக்குமூலம் வெளியாக்கிய நிலையில், அவரது மகள் தனது தாய்க்கு நேர்ந்ததை விவரித்துக் கூறினார். 

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை... தீக்குளித்து உயிரிழந்த பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்!

தானும் தனது சகோதரனும் வெளியில அமர்ந்து எழுதி கொண்டு இருந்ததாகவும் சோறு வடிப்பதாக கூறியதாகவும், அப்போது தனது தாயின் இடுப்பை தாத்தா பிடித்ததாகவும், இதனைக் கூறி தாய் கதறி அழுததாகவும் தெரிவித்தார். மழலை குரலில் தனது தாய்க்கு நேர்ந்ததை அவரது மகள் கூறியதைக் கேட்டு உறவினர்கள் கதறி எழுதினர். தனது மகள் சூதுவாது தெரியாத பெண் என்றும், இதுபோல நடப்பதாக ஏற்கனவே கூறிய நிலையில் தாங்கள் சண்டை போட்டதாகவும், இனிமேல் இதுபோல் நடக்காது என கூறி ரஞ்சிதாவின் கணவர் முனீஸ்வரன் அழைத்துச் சென்றதாகவும் சொல்லி ரஞ்சிதாவின் தாய் கதறி அழுதார்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை... தீக்குளித்து உயிரிழந்த பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share