நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்... அடுத்தடுத்து மோதிய சுற்றுலா வேன்கள்... 25 பேரின் நிலை என்ன?
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை வழியாக வாகனங்களை போலீசார் திருப்பிவிட்டபோது, மற்றொரு சுற்றுலா வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு
ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன்கள் ஒன்றோடு, ஒன்று மோதி விபத்து. நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த இரு விபத்துகளில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் அடுத்த பாச்சலில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் சுற்றுலா வேன்கள் ஒன்றன்பின், ஒன்றாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள கருப்பசாமி கோவிலிற்கு சென்றவிட்டு, வீடு திரும்பிய தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பள்ளிப்பட்டி சேர்ந்த பாண்டியன் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, காயமடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, மேம்பாலத்தை ஒட்டிய இணைப்புச் சாலை வழியாக வாகனங்களை திருப்பிவிட்டனர்.
இதையும் படிங்க: திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!
ஆனால், அதை அறியாமல் அதிவேகமாக வந்த மற்றொரு சுற்றுலாவேன் முன்னாள் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதியதோடு, தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் பழனிக்கு சென்று விட்டு வேலூருக்கு திரும்பிய 12 பக்தர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவில் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து சுற்றுலா வேன்கள் விபத்திற்கு உள்ளானதில், 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: விஜய் ஆட்சி...? - மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!