×
 

எலிக்காய்ச்சல் எதிரொலி... கல்லூரியை இழுத்து மூடுங்க... சுகாதாரத்துறை கறார் உத்தரவு...!

எலிக்காய்ச்சலால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியை தற்காலிகமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல்லையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்காரணமாக கல்லூரியை தற்காலிகமாக மூட வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எலிக்காய்ச்சல் முதன்மையாக லெப்டோஸ்பைரா பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளின், பொதுவாக எலிகள், நாய்கள், பசுக்கள், பன்றிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவுகிறது.

எலிக்காய்ச்சல் உலகம் முழுவதும், குறிப்பாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.  எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்டு 2 முதல் 30 நாட்களுக்குள் தோன்றலாம். இந்த நோய் லேசான அறிகுறிகளில் இருந்து கடுமையான, உயிருக்கு ஆபத்தான நிலைகள் வரை வெவ்வேறு வடிவங்களில் தோன்றலாம். ஆரம்பத்தில், நோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி, தசை வலி, குளிர் காய்ச்சல், மற்றும் பொதுவான சோர்வு போன்றவை ஏற்படலாம்.

இவை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிடத்தக்கவை என்பதால், ஆரம்ப கட்டத்தில் இதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. எலிக்காய்ச்சலைத் தடுப்பதற்கு சுகாதாரமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். இதனிடையே, நெல்லை மாவட்டம், திடியூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு 

இதையும் படிங்க: அன்புமணிக்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்... சின்ன அசம்பாவிதம் நடந்தாலும் மொத்த ஆட்டமும் குளோஸ்...!

எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கல்லூரியை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கல்லூரி வளாகம் முழுவதையும் புதுப்பித்தல் உள்ளிட்ட மறு உத்தரவுகள் வரும் வரை கல்லூரியை மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மழைக்காலங்களில் எலிக் காய்ச்சலால் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மிஸ் கிட்டயே சொல்றியா? சக மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… அதிர்ச்சியூட்டும் காரணம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share