இனி வேட்டி சேலை தரம் வேற லெவல்..! திட்டம் தொடரும்... அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி..!
இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடரும் என அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக முன்பணமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்த திட்டச் செலவு சுமார் ரூ.642.88 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த முன்பணம் வழங்கப்பட்டு உற்பத்திப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கப்படும் இந்த வேட்டிகளும் சேலைகளும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கப்பட உள்ளன. சுமார் 2.27 கோடி சேலைகளும் 2.25 கோடி வேட்டிகளும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தேவை அதிகரித்தால் அதற்கேற்ப இலக்கு திருத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
உற்பத்தி முடிந்ததும் தமிழ்நாடு நாகரிக விநியோகக் கழக கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, நியாய விலைக் கடைகள் வழியாக விநியோகிக்கப்படும். விநியோகத்தின் போது பயோமெட்ரிக் அங்கீகாரம் உறுதி செய்யப்படும்.இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றமாக, வேட்டி மற்றும் சேலைகளின் தரம் மற்றும் வடிவமைப்பில் மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. வேட்டிகளும் புதிய விகிதத்தில் நூல் கலவையுடன் தயாரிக்கப்பட்டு, முதல் முறையாக துவைக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு குட் நியூஸ்... பொங்கல் வேட்டி திட்டத்தில் முதல் முறையாக மாற்றம்..! அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி..!!
இந்த மாற்றங்கள் மக்கள் விரும்பிப் பயன்படுத்தும் அளவுக்கு தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி இது குறித்து தெரிவிக்கையில், 2027 பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நூல் கொள்முதலுக்காக வெளிப்படைத்தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நிதி கசிவு முதல் 13 லட்சம் காலிப்பணியிடங்கள் வரை..! தவெக அரசை கேள்விகளால் திணறடித்த EPS..!!