மக்களே கவனிங்க..! ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம்..! தவறவிடாதீங்க.!!
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் பொது விநியோக முறையின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நியாய விலைக் கடைகளில் இன்று சிறப்புக் கைரேகை பதிவு முகாம்கள் நடைபெறுகின்றன. மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்துப் பயனாளிகளின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்துவதற்காக கைரேகை அடிப்படையிலான மின்னணு அடையாளச் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின்னணு குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது கைரேகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இந்தப் பணிகள் குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும் வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளில் சுமார் 96 சதவீதத்தினர் தங்களது கைரேகைப் பதிவை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். மீதமுள்ள விடுபட்ட பயனாளிகளுக்கும் இந்தப் பணியை 100 சதவீதம் முழுமையாக முடிக்கும் நோக்கில் இன்று சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம்... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! இன்று முதல் தொடக்கம்..!!
இருப்பினும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மட்டும் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வழக்கம்போல் முகாம்கள் செயல்படும். இதுவரை நியாய விலைக் கடைகள் வழியாகக் கைரேகைப் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் அருகிலுள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க.! ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்க்கும் சிறப்பு முகாம்..!! உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை..!