ஜென்சி, ஜென் ஆல்பா தலைமுறையே மனசாட்சியோடு... விஜய்க்கு எதிராக புது அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக...!
தமிழக மக்களுக்காக அல்லும், பகலும் அயராது உழைத்து வருகிற அதிமுக என்ற மகத்தான மக்கள் இயக்கத்தை ஏளனம் செய்தால் அது இந்த தமிழ்நாட்டு மக்களை ஏளனம் செய்ததாக ஆகாதா?
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், பொது வாழ்க்கையில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து, இளம் தலைமுறையின் பங்களிப்பு மகத்தானது. இன்றைய சூழ்நிலையிலே பொது வாழ்க்கையில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருவது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எப்போதும் இளைஞர்கள் சக்திக்குத்தான் ஆற்றலும், வீரமும் அதிகம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சுயநலம் இல்லாமல் பொதுநலத்தோடு பொது வாழ்க்கையிலே ஈடுபடக்கூடிய அந்த எண்ணமும், சிந்தனையும் உருவாகும் என்பது நமக்கு தெரியும்.
தற்போது ஜென்சி மற்றும் ஜென் ஆல்பா இளைய சமுதாயம் அரசியல் ஆர்வத்தோடு தங்களின் விலைமதிப்பற்ற ஆற்றலையும் பொன்னான நேரத்தையும் சமூக அக்கறையோடு பொது வாழ்க்கையில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் இன்றைக்கு சமூக வலைதளங்களில் வசீகரம், கவர்ச்சியோடு, ஆதாரமற்ற ஆதரவு பிரச்சாரங்கள், குறிப்பாக மாய பிம்பம் கட்டமைக்கப்படுகிற விஜயின் ஆதாரமற்ற ஆதரவு பிரச்சாரத்திற்கு ஆதரவாக நிற்கிறார்களோ, என்ற கேள்வி எழுகிறது.
இதையும் படிங்க: திரையில் ஹீரோ... தரையில் ஜீரோ... சி.எம்.விஜய் ரீல் அந்துபோய் விட்டது.. ஆர்.பி.உதயகுமார் கலாய்...!
50 ஆண்டு காலம் இந்த சமூகத்தில் தங்களை அர்ப்பணித்து உழைத்து எந்தவிதமான அரசியல் வாரிசு பின்புலமும் இல்லாமல், எந்தவிதமான சினிமா வசீகரமும் சினிமா நடிப்பும் கவர்ச்சியும் இல்லாமல், உண்மையாக மக்களை நேசிக்கின்ற சமூக அக்கறையோடு சாமானியர்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை தீர்த்து வைக்கின்ற அக்கறையும் , உழைப்பும் தன்னகத்தே கொண்டு எளிமையான அணுகுமுறையும், கருணையுள்ள அரவணைப்பும் தன்னகத்தே கொண்டு, ஜனநாயகத்தின் அடையாளமாக ஊன் உறக்கமின்றி சமூகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற எடப்பாடியார் போன்ற எளிய சாமானிய தலைவர்களை, ஜனநாயக மக்களை நேசிக்கின்ற உழைக்கின்ற தலைவர்களை, மக்களுக்காக அர்ப்பணித்திருக்கின்ற தலைவர்களை, மக்களுக்காக தன் உலகத்தை ஒப்படைத்திருக்கின்ற தலைவர்களை இளைய சமுதாயமே மனசாட்சியோடு மதிப்பிட்டுப் பாருங்கள்.
இளைய தலைமுறையே ஜென்சி தலைமுறையே, ஜென்பா தலைமுறையே மனசாட்சியோடு மதிப்பிட்டுப் பாருங்கள். உங்கள் மதிப்பீட்டில் உங்கள் மனதிலே நிச்சயமாக உயர்ந்து நிற்பார் எடப்பாடியாரும்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், தமிழக புரட்சித் தலைவர் அம்மா அவர்கள் உயிரைக் கொடுத்து உருவாக்கி வளர்த்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்றைக்கு தனக்கு இருக்கக்கூடிய வசீகரத்தின், ஆணவத்தால் பொன்விழா கண்ட கட்சியை அல்லு,சில்லு என்றும், தீந்ந்து போன கட்சி என்றும், மற்றும் பலர் என்றும் ஏளனலம் செய்வது முதல்வர் அவர்களே நியாயம் தானா? தர்மம் தானா? என்று அவரிடத்திலே நியாயம் கேட்பது நியாயமாக இருக்காது.
ஆனால் அவருக்கு துணை நிற்கிற இளைய தலைமுறையே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்த தவறு என்ன? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்த தப்பு என்ன? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சத்துணவு திட்டம் தொடங்கி ,69% இட ஒதுக்கீட்டை வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் வழங்கி, 7.5% உள் இட ஒதுக்கீடை வழங்கி, குடிராமத்து திட்டத்தை வழங்கி இன்றைக்கு மாணவர் சமுதாயத்தின் நம்பிக்கையை உறுதி செய்ய ஆல்பாஸ்சை கொரோனா காலத்தில் வழங்கிய இந்தியாவிலே ஒரே முதலமைச்சர்.
இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்தாலும், அதிகாரத்திலே இருந்தாலும், ஆட்சியிலே இல்லை என்றாலும், அதிகாரத்திலே இல்லை என்றாலும், தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிற அந்த மகத்தான மக்கள் இயக்கத்தை இன்றைக்கு ஏளனம் செய்தால் அது இந்த தமிழ்நாட்டு மக்களை ஏளனம் செய்ததாக ஆகாதா?இந்த தமிழ்நாட்டு மக்களை விமர்சிப்பதாக ஆகாதா?
மக்களுக்காகவே நான், மக்களால் நான் என்று உழைத்தார்கள் புரட்சித் தலைவர் அம்மா அவர்களும் .அமைதி, வளம், வளர்ச்சியை உருவாக்குவதற்காக எடப்பாடியார் அவர்களையும் இன்றைக்கு நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் ஏன் என்று சொன்னால் அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால் நாம் இந்த இடைத்தேர்தலிலே நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இந்த இடைத்தேர்தல் என்பது ஒரு சாதாரண இடைத்தேர்தல் அல்ல. துரோகத்துக்கு பாடம் புகட்டுகிற ஒரு இடைத்தேர்தல்.
தாராபுரம் ,மதுராந்தகம் இடைத்தேர்தல் என்பது 50 ஆண்டு காலம் நடக்கிற தேர்தலைப் போல அல்ல. ஒரு இயக்கத்துக்கு உயிர் கொடுக்கிற தேர்தல். மக்களுக்கு உழைக்கிற இயக்கத்தை காப்பாற்றுகிற தேர்தல். மக்களுக்காக பாடுபடுகிற, மக்களுக்காக திட்டங்களை அள்ளி அள்ளி வழங்கிய அந்த இயக்கத்தை மீட்டெடுக்கிற ஒரு தேர்தல்..
மொத்தத்திலே மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைக்கிற அந்த இயக்கத்திற்கு உயிர் கொடுத்து புத்துணர்ச்சி கொடுக்கிற தேர்தல்தான் இந்த தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல். ஆகவே களத்திலே எதிர்த்து நிற்கிற தவெகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கிற வெற்றி என்பது பத்தோடு , பதினொன்றாக தான் இந்த வெற்றி பார்க்கப்படும்.
ஆனால் அனைத்தந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்கிற அந்த வெற்றிதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொன்விழா காண்கின்ற கட்சியை நாம் காப்பாற்றி அரசியல் களத்திலே ஜனநாயகத்திற்கு உயிர் ஊட்டுகிற தேர்தல் துரோகம் யார் நினைத்தாலும் அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துகிற தீர்ப்பாகத்தான் இந்த தீர்ப்பு இரட்டை இலைக்கு ஆதரவாக அமையும் என்கிற நம்பிக்கை தமிழக மக்களுக்கு ஏற்படுத்துகிற ஒரு தீர்ப்பாக தாராபுரம், மதுராந்தக மக்களும் கொடுப்பார்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் இரட்டை இலையை நீங்கள் மலரச் செய்யுங்கள்.
உங்கள் பிள்ளை குட்டிகள் எல்லாம் நன்றாக இருப்பதற்கு, உங்கள் தலைமுறை தலைத்தோங்குவதற்கு உங்கள் தலைமுறை தலைமுறையாக புண்ணியத்தை தேடிக் கொள்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரியுங்கள். இரட்டை இலையை மீண்டும் மலரச் செய்யுங்கள்.
வசீகரம் இல்லாத ,உண்மையான ஊருக்கு உழைக்கிற தலைவரை நீங்கள் அடையாளம் கண்டு அவரை நீங்கள் கவனத்திலே கொள்ள வேண்டும். அவர்களை ஆதரிக்க வேண்டும். இளைய தலைமுறையே சிந்திக்கும் திறன் கொண்ட செயலாற்றும் திறன் கொண்ட அறிவு ஆற்றல் கொண்ட அன்னை தமிழகத்தின் அடையாளமே இளைய தலைமுறையே உங்கள் கையில்தான் இருக்கிறது. இந்த நாட்டினுடைய எதிர்காலம் ,சிந்திப்பீர் வாக்களிப்பீர் இரட்டை இலையை மீண்டும் மலரச் செய்வீர் என கூறினார்.
இதையும் படிங்க: விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!