அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்
வயிற்றெரிச்சல் பிடித்த மனிதர்களுக்கு தோல்வியே கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தின் ஒற்றுமை குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் ஒற்றுமைக்கான அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இதை கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் முயற்சியாகக் கருதுகின்றனர்.
செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவுடன் ஒற்றுமைக்கான அழைப்பை விடுத்தார். அவர், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரைத் திரும்ப அழைத்தால் மட்டுமே கட்சி வெற்றி பெறும் என்று வலியுறுத்தினார்.இந்த அழைப்பு இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் இதை ஒற்றுமை என்ற பெயரில் கட்சியின் அடித்தளத்தை அழிக்கும் சதியாகக் காண்கின்றனர்.
இபிஎஸ்ஸின் நெருங்கிய ஆதரவாளர்களான திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் ஆர். விஸ்வநாதன் போன்றோர், இந்தக் கருத்துகளுக்கு இபிஎஸ்ஸின் முடிவுக்கு ஏற்ப செயல்படுவோம் என்று தெளிவுபடுத்தினர். அவர்களின் கருத்துப்படி, செங்கோட்டையனின் அழைப்பு கட்சியின் ஒற்றைத் தலைமையை சீர்குலைக்கும் முயற்சி என கருதப்படுகிறது. இந்த நிலையில், ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என சிலர் திட்டம் தீட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி! பாஜகவினரை ஆஹா…ஓஹோ… என புகழ்ந்த செங்கோட்டையன்
பழனிசாமியின் பயணத்திற்கு பேரலையாக மக்கள் வருவதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்கள் இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டினார். அத்தகைய வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத் தரும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: இபிஎஸ் பொதுச்செயலாளரா? சில விஷயங்கள் இருக்கு! ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...