×
 

"தமிழக முதல்வரின் பவர் சென்டர் த்ரிஷா"..! ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு..!!

முதல்வர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் R.B. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் மஹாலில் ஆகிய அதிமுக அம்மா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற போது நான் மட்டும்தான் பவர் சக்தி என கூறினார். 80 ஆவது சுதந்திர தினத்தின் போது முதல்வர் விஜய் தேசிய கொடி ஏற்றினார்.

அப்போது சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகளின் மனம் குளிர்ந்தது என மறைமுகமாக சாடினார். சுதந்திர தின நிகழ்ச்சியில் முதல் வரிசையில் விஜயின் தாயும் தந்தையும் VVIP வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். தாயும் தந்தையும் தெய்வமாக வழங்குவது தான் தமிழர் பண்பாடு, அதில் தவறு ஒன்றும் இல்லை.

விஜயின் அன்புக்குரியவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, அவரின் பாதுகாப்புக்கு பெண் காவலர் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் வரிசையில் முதல்வருக்கு தெரியாமல் இடம் ஒதுக்க முடியுமா?. தமிழக முதல்வர் விஜய் அவர்களை பவர் சென்டராக இயக்குகிற பவர் சென்டர் விஜயின் தாய் தந்தை அருகே அமர்ந்திருந்த நபர் தான் என அறிவிக்காமல் அறிமுகத்தை அரங்கேற்றி இருக்கிறார் என திரிஷாவை மறைமுகமாக சாடினார்.

இதையும் படிங்க: பெயர் மாற்றுவதில் முதல்வர் பிசி.! சட்டப்பேரவையை சினிமா செட்-னு நெனச்சுட்டாரு..! ஸ்டாலின் விமர்சனம்.!!

திரிஷாவின் பெயரை நேரடியாக சொல்ல முடியாது, திரிஷாவின் பெயரைச் சொன்னால் முதல்வர் விஜய்க்கு கோபம் வரும் என கூறினார். அப்புறம் தஞ்சாவூர் மாதிரி இங்கேயும் ஆகிவிடும். கடைசியில் தஞ்சாவூர் தேர்தல் ஊர்வலமாக மாறிவிட்டது என்றார். அடுத்து விஜய் தான் பிரதமர், அண்ணி தான் முதலமைச்சர் என ஆர் பி உதயக்குமார் முதல்வர் விஜய் மற்றும் திரிசாவை கடுமையாக தாக்கி பேசினார். 

இதையும் படிங்க: கொத்தடிமைகளை கொத்தாக வெளியேற்றி கெத்தாக அமர்ந்தவர் விஜய்... பேரவையில் எம் எல் ஏ தாஹிரா பேச்சு.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share