×
 

#BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…! அப்போ சென்னைக்கு?

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டது.

இதன் காரணமாக வரும் நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு வடமேற்காக நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! உஷார் மக்களே..!!

 நாளை 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 23ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்றும் சென்னைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தீவிரமடையும் பருவமழை... நேரடியாக களமிறங்கிய முதல்வர்... ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share