வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம்?! ஒருவாரம் அடித்து ஊற்றப்போகும் மழை! 16 மாவட்டங்களுக்கு அலர்ட்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை அடுத்த ஒரு வாரத்துக்கு தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது
சென்னை, நவம்பர் 20: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை அடுத்த ஒரு வாரத்திற்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 3-4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:
- தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
- வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. இது 24-ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
- இந்த இரண்டு அமைப்புகளின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை தொடரும்.
நாளை (நவம்பர் 21) எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால்.
நவம்பர் 22 & 23:
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் – இங்கு மிக கனமழை கொட்டும்.
நவம்பர் 24:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால்.
இதையும் படிங்க: ஒரு வாரத்துக்கு நான் ஸ்டாப் கனமழை!! இதோ ஊர்கள் லிஸ்ட்!! வானிலை அப்டேட்!!
நவம்பர் 25:
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால்.
நவம்பர் 26:
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால்.
சென்னை நிலவரம்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இன்று காலை வரை பதிவான அதிகபட்ச மழை அளவு:
- தென்காசி அருகே ஆயக்குடி – 150 மி.மீ.
- தென்காசி – 130 மி.மீ.
- அம்பை (திருநெல்வேலி) – 110 மி.மீ.
- ஊத்து, நாலுமுக்கு – 90 மி.மீ.
- காக்காச்சி, கருப்பாநதி அணை – 80 மி.மீ.
தென் மாவட்டங்களில் ஏற்கனவே பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் கனமழை தொடரும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளன. மீனவர்கள் அடுத்த 7 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேலும் தீவிரம் அடைந்தது வடகிழக்கு பருவமழை!! 23 மாவட்டத்தில் கனமழை அலர்ட்! - வானிலை அப்டேட்!