×
 

குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊர்திகள்..! களைகட்டிய நிகழ்ச்சிகள்..!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக அரசின் துறைகள் சார்பில் அலங்கார உறுதிகள் அணிவகுப்பு நடைபெற்றது.

நாட்டின் 77வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு துறையின் சார்பிலும் அலங்கார உறுதிகள் குடியரசு தின விழாவில் அணிவகுத்தன. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு பாதுகாப்பான தமிழ்நாடு என்ற கருப்பொருளில் காவல்துறை வாகனம் அணிவகுத்தது.

விளையாட்டு சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற கருப்பொருளில் வளம் வந்த விளையாட்டு துறையின் ஊர்தி கண்களை கவர்ந்தது. பயிர் கடன், முதல்வர் மற்றும் இளைஞர்களின் உள்ளிட்டவை இடம்பெற்ற கூட்டுறவு துறையின் அலங்கார உறுதியும் அணிவகுத்து வந்தன. மேலும் சாதனை திட்டங்கள் என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

அன்பு கரங்கள் உள்ளிட்ட திட்டங்களை பறைசாற்றும் பள்ளிக் கல்வித் துறையின் அலங்கார ஊர்தி மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின், நம்மை காக்கும் 48 என எண்ணற்ற திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படுவதை எடுத்துரைக்கும் விதமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் அலங்கார ஊர்தி ணிவகுப்பு நடந்தது.

இதையும் படிங்க: 44 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் நெசவாளர்களுக்கு உருவாக்கப்பட்ட திட்டங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. இதேபோல் கால்நடை துறை, டிஜிட்டல் சேவைத்துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு துறை, அறநிலையத்துறை என தமிழக அரசின் தொழில் செயல்படும் அனைத்து துறைகளின் சார்பிலும் அலங்கார உறுதிகள் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனை திட்டங்களை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டு குடியரசு தின விழாவில் அணிவகுத்தன. இறுதியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டு   குடியரசு தின நிகழ்ச்சி நிறைவு பெற்றது. 

இதையும் படிங்க: மெரினாவில் பிரம்மாண்ட குடியரசு தின இறுதி அணிவகுப்பு ஒத்திகை..! போக்குவரத்து மாற்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share