கொட்ட போகுது மழை.. குடை எடுத்துட்டு போங்க மக்களே! வானிலை கூல் அப்டேட்..!
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக சென்னை உட்பட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஜூலை 15 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது.
மேலும், ஜூலை 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
இதையும் படிங்க: வெயிலுக்கு லீவு.. விளாசப்போகும் மழை.. எந்த ஊர்ல தெரியுமா?