×
 

ஷாக்கிங் நியூஸ்! ஒரே மாதத்தில் அரிசி, மளிகை விலை விர்ர்ர்ர்! கடும் சிக்கலில் நடுத்தர குடும்பங்கள்!

அரிசி, மளிகை பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதால், பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரிசி மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்திருப்பது பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அரிசி, பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, சர்க்கரை உள்ளிட்ட அன்றாட சமையலுக்கு தேவையான பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் மாதாந்திர செலவு பல ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் முழு அரிசி தேவையையும் மாநில உற்பத்தி மூலம் பூர்த்தி செய்ய முடியாததால், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து அதிகளவில் அரிசி கொண்டு வரப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங்களில் நெல் உற்பத்தி குறைந்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்திருப்பதும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் பதுக்கல் நடைபெறுவதாக கூறப்படுவதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, பொன்னி புழுங்கல் அரிசி கிலோவுக்கு அதிகபட்சமாக 9 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குண்டு மிளகாய் 260 ரூபாயில் இருந்து 320 ரூபாயாகவும், தனியா 160 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: உச்சம் தொட்டது அரிசி விலை!! சீரக சம்பா தடாலடி உயர்வு!! பற்றாக்குறையால் பதறும் இல்லத்தரசிகள்!!

முதல் தர பூண்டு 200 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும், புளி கிலோவுக்கு 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் சர்க்கரையின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அரிசி ஆலை துறை நிபுணர்கள் கூறுகையில், தென் மாநிலங்களில் நெல் சாகுபடி சுமார் 10 சதவீதம் குறைந்திருப்பதால் நெல்லுக்கான போட்டி அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் இருந்து அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்முதல் செய்வதால் சந்தை விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அரிசி விலை குறையும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், கிலோ 60 ரூபாய்க்கு கீழ் விற்பனை ஆகும் சாத்தியம் குறைவாகவே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வு தொடர்ந்தால் குடும்பங்களின் மாதாந்திர செலவு மேலும் அதிகரிக்கும் என்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: கலைவாணர் அரங்கில் தான் இனி அரசு ஆய்வு கூட்டம்! தலைமைச் செயலகத்தில் தொடங்கியது பணிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share