இவ்வளவுதான் சட்டமா? தலையில இடியை இறக்கிட்டீங்களே! குமுறும் ரிதன்யாவின் தந்தை..!
மகளை பறிகொடுத்த துயரத்தில் இருந்தே இன்னும் வெளி வராத நிலையில் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது அதிருப்தி அளிப்பதாக ரிதன்யாவின் தந்தை தெரிவித்தார்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேர்ந்தவர் தொழிலதிபரின் மகள் ரிதன்யா. இவருக்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனால் மனமடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா தன் அப்பாவுக்கு அனுப்பினார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: #BREAKING தமிழகத்தையே உலுக்கிய ரிதன்யா தற்கொலை வழக்கு - கணவர், மாமனார், மாமியாருக்கு ஜாமீன்...!
இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, தங்கள் மகள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என ரிதன்யாவின் பெற்றோர் கோரி வருகின்றனர். இதற்கிடையில் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ரிதன்யாவின் தந்தை, எனது மகளை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் வெளிவராத நிலையில் இன்னும் தலையில் இடியை இறக்கியது போல ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். பெண்களுக்கு நாட்டில் எவ்வளவு தான் நீதி கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அரசின் மீதும் நீதி அரசர்கள் மீதும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். தனது மகள் இறப்புக்கு காரணமான மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!