என்னது தரம் இல்லையா? கேள்வி கேளுங்க., அப்ப புரியும்... ஆளுநருக்கு அன்பில் மகேஷ் சவால்...!
தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பு தரம் குறைந்துள்ளதாக கூறிய ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சவால் விடுத்தார்.
ஆர்.என். ரவி, 2021 செப்டம்பரில் தமிழ்நாட்டின் 15வது ஆளுநராகப் பதவியேற்றவர். முன்னர் இந்திய புலனாய்வு அமைப்பின் (IB) மூத்த அதிகாரியாகப் பணியாற்றிய இவருக்கு, வடகிழக்கு மாநிலங்களின் அமைதி உடன்படிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. தமிழ்நாட்டில் பதவியேற்றதிலிருந்து, அவர் கல்வி, மொழி, சமூக நீதி உள்ளிட்ட துறைகளில் தமிழக அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது, அரசியல் வட்டாரங்களில் "மத்திய அரசின் குரலாக" செயல்படுவதாக விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தனது பல்வேறு பொது உரைகளிலும், கல்வித் துறையின் தரம் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளின் தரம் குறைந்துள்ளதாக அவர் கூறியது, அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசுடன் ஆளுநருக்கு இடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆளுநருக்கு அமைச்சர் அன்பு மகேஷ் சவால் விடுத்தார். ஆராய்ச்சி படிப்பு வைவாவில் மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார். மாணவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து நமது கல்வியின் தரத்தை தெரிந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பள்ளிகளில் மழைநீர் தேங்காது... மீறி தேங்கினால்... " - அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு தகவல்...!
ஏற்கெனவே கல்வி விவகாரத்தில் தமிழக ஆளுநர் ரவி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தற்போது ஆராய்ச்சி படிப்பு விவகாரத்தில் தனது விமர்சனங்களை முன்வைத்த நிலையில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கேடுகெட்ட ஆட்சி... காட்டாட்சி..! கடிவாளம் போடுவோம் முதல்வரே... நயினார் உறுதி...!