பத்து நாள் தான் டைம்... பக்காவா ரெடி ஆகணும்! ரோடு ஷோ விவகாரத்தில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க பத்து நாட்கள் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது, வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு நடத்த அனுமதி தரப்படாது என்ற உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பது ஆகாதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் ஆகாதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை எனவும் தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது அனைத்து கட்சிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். விதிகள் வகுக்கும் வரை பரப்புரைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், உரிய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடம் ஆலோசித்து தான் விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காவல், மாநகராட்சி, தீயணைப்பு, மருத்துவத்துறையை உள்ளடக்கியவரை ஆலோசித்து விதிகளை வகுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லையா... இதெல்லாம் நியாயமா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி...!
அதற்கு பத்து நாட்களில் விதிகளை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் நவம்பர் 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் SIR... பாஜக அழுகுணி ஆட்டம் எங்க கிட்ட பலிக்காது... திமுக விளாசல்...!