×
 

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம்... காலத்தால் அழியாத கலைஞர்...!

மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி உலகில் சிரிப்பின் ராஜாவாகத் திகழ்ந்த ரோபோ சங்கர், நேற்று இரவு நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதில் இழந்த இந்தப் பெரும் நட்சத்திரம், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் ரோபோ போன்ற நடனத்தால் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.

இளமை காலத்தில் இருந்தே நகைச்சுவை மற்றும் மிமிக்ரி கலைக்கு ஈடுபட்டார். கிராமப்புற நிகழ்ச்சிகளில் ரோபோ போன்ற நடனம் ஆடுவதன் மூலம் ரோபோ சங்கர் என்ற பெயரைப் பெற்றார். இது அவரது தனித்துவமான அடையாளமாக மாறியது. தொலைக்காட்சி உலகில் அவர் பிரபலமானது கலக்கபோவது யாரு நிகழ்ச்சி ஆகியவற்றில் அவரது ஸ்டாண்ட்-அப் காமெடி, உடல் மொழி மற்றும் மிமிக்ரி அனைவரையும் கவர்ந்தது. அவரது திரைப்பட டயலாக்குகளில் “அன்னைக்கு காலையில ஆறு மணிக்கு” என்பது மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. பல்வேறு திரைப்படங்களில் தனக்கென தனி பாணியை அமைத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ரோபோ ஷங்கரின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: அவர் கூப்பிட்டப்ப வர முடியல! ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் உருக்கம்

ரோபோ சங்கரின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. இந்த நிலையில் மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: சிறந்த நகைச்சுவை கலைஞர்! ரோபோ சங்கர் உடலுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அஞ்சலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share