ரவுடி நாகேந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்யுங்கள்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!
ரவுடி நாகேந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் உடனான பகை, நாகேந்திரனின் குடும்பத்தின் அரசியல் ஆகிரமிப்பிலிருந்து தொடங்கியது. அவரது மகன் என். அஸ்வத்தாமன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர்., அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங்குடன் நில விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரவுடி நாகேந்திரன் ஏ1, சம்போ செந்தில் ஏ2, நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் ஏ3 ஆக அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ரவுடி நாகேந்திரன் மரணம்... எங்களுக்கு DOUBT- ஆ இருக்கு... ஐகோர்ட்டில் முறையீடு...!
கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் நேற்று மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்ததாக கூறப்பட்டது. ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி விசாலாட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு பிரயோத பரிசோதனை நடத்த வேண்டும் என்று முறையிட்டார்.
இந்த நிலையில், ரவுடி நாகேந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்வதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனை மாதிரிகளை தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... உயிருக்கு ஆபத்து... ஆற்காடு சுரேஷ் மனைவியின் ஜாமீன் மனு தள்ளுபடி...!