"வட சென்னை தாதா நாகேந்திரன் சாகவில்லை"... ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக வடசென்னை தாதா நாகேந்திரன் இறக்கவில்லையென உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பிரதான குற்றவாளி வடசென்னை தாதா நாகேந்திரன் சாகவில்லை என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
வடசென்னை தாதா நாகேந்திரன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீசார் தப்ப வைத்துவிட்டதாக ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் அவருடைய மகன் அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் நாகேந்திரன் மரணமடைந்தார்.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழு... ஆம்ஸ்ட்ராங் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல்...!
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தமன் உட்பட 12 பேர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட வழக்கு கோப்புகளை மாநில காவல்துறை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக ஆம்ஸ்டராங்கின் சகோதரர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மற்றும் பகுதன் சமாஜ் தமிழ்நாடு கட்சியின் தலைவர் ஆனந்தின் சார்பிலும் இந்த இணையேற்ற மணு தாக்கல் செய்யப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, நாகேந்திரன் மரணமடைந்ததாக கூறப்படுவதாகவும், ஆனால் அவரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீசார் தப்ப வைத்துவிட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பின்னர் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அஸ்வத்தமன் ஹரிகரன் உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுக்கான தீர்ப்பை வரும் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தாகவும் மற்ற 12 பேரில் ஒன்பது பேர் மீதான ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டர்.
இதையும் படிங்க: #BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சிபிஐ விசாரிக்க தடை இல்லை… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!