ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற சம்பவம்..! தலைமறைவான 6 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!
ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூரில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடியை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட துணிகரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரவுடி வெள்ளை காளி என்பவர் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரவுடி வெள்ளை காளி மீது ஒன்பது கொலை வழக்குகள் எட்டு கொலை முயற்சி வழக்குகள் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளை காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி நடந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இரண்டு கார்களில் வந்த நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ளனர் கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு வீசியவர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்திருந்தார். நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கார்கள் சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தன.
இதையும் படிங்க: பாகிஸ்தானை குண்டு வெடிப்பு..! தொழுகையின் போது நேர்ந்த தாக்குதல்... 15 பேர் பலி..!
ரவுடி வெள்ளைக்காளியை கொள்ள முயன்ற வழக்கில் கொட்டு ராஜா என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். தாக்குதல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆறு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பதுங்கி இருந்தவர்களை தேடுதல் வேட்டை நடத்தி பெரம்பலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கொழுத்துபோய் திரியும் ACCUST-கள்... தட்டிக் கேட்டா கொலையா? நயினார் கொதிப்பு..!