விஜயபாஸ்கரை வைத்து பேரம்... திமுக MLA- க்களுக்கு குறி... R.S.பாரதி குற்றச்சாட்டு..!!
ஆளுநர் அர்லேகரை சந்தித்த பிறகு திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கரூர் துயரச் சம்பவத்தில் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து திமுகவினர் புகார் மனு கொடுத்து உள்ளனர். சட்டம் ஒழுங்கு விவகாரம், பாலியல் வன்கொடுமைகள், அரசு வழக்கறிஞர் நியமனம், ஆய்வு என்ற பெயரில் அராஜகம் நடப்பதாக திமுக சுட்டிக்காட்டி உள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையின் மூலம் மிரட்டியது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்ட இருப்பதாக கூறப்பட்டது.
கரூர் துயரச் சம்பவத்தில் காவல்துறையே கொலை செய்தது என வரம்பு மீறி அமைச்சர்கள் பேசுவதாகவும் திமுக புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆளுநரை சந்தித்த பிறகு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றி கழகம் நடத்தும் குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் நேரடியாக விளக்கம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அமைச்சர்களை விட அதிகாரம் பெற்றவர்களாக இருக்கின்றனர் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது எனவும் கூறினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடம் தமிழக வெற்றி கழகத்தினர் குதிரை பேரம் நடத்தியதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அலுத்து போச்சு..! கேவலமான காரியத்தை திமுக செய்யாது..! ஆர்.எஸ். பாரதி பேட்டி..!!
அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்றால் ஜான் ஆரோக்கியசாமி அமைச்சராகி இருக்கலாமே என ஆளுநர் தங்களிடம் கூறினார் எனக் கூறியுள்ளார். அவதூறு வழக்கிற்கு கைது நடவடிக்கை தேவையில்லை என்றும் பதவி விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். திமுகவில் இருந்து விலகிய விஜயபாஸ்கரை வைத்து ஓ எஸ் மணியனை பேரம் பேசியதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!