×
 

இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..!

பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியப் போவது உறுதி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு திமுக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்ததாகவும், பாஜக-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்து என்ன செய்தார்? எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார்? எனப் பட்டியல் போட முடியுமா? மாறாகத் தமிழ்நாட்டுக்கு துரோகங்களைத்தான் பழனிசாமி செய்தார் என சாடினார்.

ராஜ்பவனில் அடிமைப்பட்டுக் கிடந்தது பழனிசாமி அரசு, தமிழர்களின் தன்மானம் சீண்டப்பட்ட போது பழனிசாமி எதிர்த்து குரல் கொடுத்தாரா? துணை வேந்தர் நியமனம் தொடர்பாகச் சட்டப் போராட்டம் நடத்தி, இந்தியா முழுமைக்கும் அதிகாரம் பெற்றுத் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல சூரப்பா விவகாரத்தில் சூரத்தனம் காட்டினாரா பழனிசாமி? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் திமுகவை பற்றிப் பேச என்ன திராணி இருக்கிறது? தனது குடும்பத்தைக் காப்பாற்ற மோடி அரசின் அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து இவ்ளோ பயமா..? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த நயினார்!!

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை எனப் பேசிய பச்சைப்பொய் பழனிசாமி எந்த வெட்கமும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பேசும் வீர வசனங்களைக் கோமாளியின் உளரல்களாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்ப்பதாகவும், ஒன்றிய பாஜகவின் காலடியில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டைச் சீர்கெடுத்த ஆட்சிதான் அதிமுக பாஜக ஆட்சிகள் என ஆர்.எஸ்.பாரதி சரமாரியாக சாடியுள்ளார்.

இதையும் படிங்க: வீட்டில் கூட வாழ முடியல; இதான் உங்க திராவிட மாடலா? கடுப்பில் கழுவி ஊற்றிய சீமான்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share