மத்திய அரசுக்கு கெட்ட எண்ணம்... தமிழக வளர்ச்சியை தாங்கிக்க முடியல... விளாசிய R.S.பாரதி...!
தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.
கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும். கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது.
100 நாள் வேலைத்திட்டத்தில் நிதி குறைப்பு குறித்து ஆர்.எஸ். பாரதி பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து மத்திய அரசு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு வகையில் நெருக்கடிகளை கொடுத்து வருவதாக ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார். தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் கை வைத்திருப்பதன் காரணம் இவ்வளவு செய்தும் தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்ற எண்ணம்தான் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை மத்திய அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் ஆர்.எஸ். பாரதி விமர்சித்தார். எல்லா மாநிலங்களும் மத்திய அரசின் கீழ் தான் இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும் இவை அனைத்தும் ஒரே நாடு ஒரே மொழி உள்ளிட்டவைகளை நோக்கி எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இனி 100 நாட்கள் இல்லை”... 100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு...!
இதற்காக தான் பேரறிஞர் அண்ணா மாநில சுயாட்சி கொள்கையை முன்னெடுத்ததாக தெரிவித்தார். மத்திய அரசுக்கு கெட்ட எண்ணம் இருப்பதாக தெரிவித்த ஆர்.எஸ் பாரதி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் வளர்ந்து கொண்டிருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: காந்தியடிகள் மீது பாஜக அரசுக்கு வன்மம்... முதல்வர் ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு...!