“நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்”.. அண்ணாமலைக்கு வாக்கு கொடுத்த ஆர்.எஸ்.எஸ்... பாஜக சைலண்ட் பின்னணி...!
அண்ணாமலை மௌனத்துக்கு பின்னணியில ஆர்எஸ்எஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததில் இருந்தே பாஜகவில் அண்ணாமலை ஓரங்கப்பட்டுவிட்டார். குறிப்பாக சமீப காலமாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சிலர், திட்டமிட்டே சொத்து குவிப்பு போன்ற அவதூறுகளை பரப்பி வருவதாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சோசியல் மீடியாவில் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையே பாஜகவில் நயினார் நாகேந்திரன் மகனுக்கு முக்கிய பொறுப்பு கொடுத்ததும் அண்ணாமலை தரப்பை அதிக அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் விரக்தியில் இருந்த அண்ணாமலையை ஆர்எஸ்எஸ் தரப்பு ஆதரவு கொடுத்து தேற்றி இருக்கிறார்களாம். நாங்க உங்களுக்கு சப்போர்ட் செய்கிறோம், கைவிடமாட்டோம் என வாக்கு கொடுத்திருகிறார்களாம். அண்ணாமலை பாஜக விவகாரங்களில் இருந்து முழுசாவே ஒதுங்கி இருக்காரு. பெயரளவுக்கு மட்டுமே பிரஸ் மீட், கட்சி நிகழ்ச்சிகளுக்காக வெளியே தலை காட்டுறாரு. பாஜகவோட டெல்லி தலைமையும் அண்ணாமலைக்கு பதவி கொடுக்கிற விவகாரத்தில பெருசா முடிவெடுக்கலையாம். கட்சியை விட்டு வெளியேறிடலாமாங்கிற ஆலோசனையில இருந்து அண்ணாமலைக்கு காத்திருங்கள் கதவுகள் திறக்கும் அப்படிங்கிற மெசேஜ் ஆர்எஸ்எஸ் கொடுத்திருக்காம்.
பாஜகவுக்கு இப்ப வரைக்கும் ஜே.பி.நட்டா தான் தேசிய தலைவராக இருக்கிறார். அவரை மாற்றுவதற்காக பாஜக தரப்பில் பல பேரோட லிஸ்ட்ட ஆர்எஸ்எக்கு அனுப்பியும். ஆர்எஸ்எஸ் இதுவரைக்கும் யாருக்கும் ஓகே சொல்லலையாம். அதேபோல ஆர்எஸ்எஸ் மூணு பேரை பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க, அதை மோடியும் அமித்ஷாவும் நிராகரிச்சிட்டாங்களாம். எப்படியோ ஆர்எஸ்எஸ் கை தான் இதுல ஓங்கோங்கிறாங்க. அப்படி ஒரு தலைவர் பாஜகவுக்கு வந்தவுடன் அண்ணாமலைக்கு தகுதியான ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டு முக்கியத்துவமும் கொடுக்கப்படும்னு ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு சொல்லி இருக்காங்களாம்.
இதையும் படிங்க: TTV தினகரனுடன் இதை தான் பேசினேன்! உண்மையை போட்டு உடைத்த அண்ணாமலை...!
இதை கிட்டத்தட்ட கடந்த வாரம் அண்ணாமலையோட வீட்டுக்கு போன பாஜகவோட தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷம் உறுதிப்படுத்தி இருக்காராம். தன்னோட அரசியல் குருவே இப்படி ஒரு வாக்கு கொடுத்த பிறகு உற்சாகம் அடைஞ்சிருக்காராம் அண்ணாமலை.
இதையும் படிங்க: மீண்டும் NDA கூட்டணியில் தினகரன்? அண்ணாமலை - TTV திடீர் சந்திப்பு...