கட்டுக்கடங்காத கூட்டம்... ஐயப்ப பக்தர்களின் உயிர் காக்க தேவசம் போர்டு எடுத்த அதிரடி முடிவு...!
பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நிலக்கல்லில் பக்தர்கள் தங்கவைக்க தேவசம்போர்டு எடுத்த முடிவு
சபரிமலை சன்னிதானத்தில் இன்று காலை முதல் ஐயப்பன் பக்தர்களுடைய கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது பம்பையில் காத்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நிலக்கல்லில் பக்தர்கள் தங்கவைக்க தேவசம்போர்டு எடுத்த முடிவு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அடிப்படை வசதிகளை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவது சபரிமலையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை மண்டல கால பூஜை தொடங்கிய பிறகு நான்காவது நாளாக என்றும் ஐயப்ப பக்தர் வருகை அதிகரித்து காணப்படுகிறது கடந்த இரண்டு நாட்களாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்த காரணத்தினால் பம்பை,
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... "படிகளை தொட்டு வணங்க வேண்டாம்"... வெளியானது முக்கிய அறிவிப்பு...!
மரகூட்டம், சரங்கொத்தி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தேவசம்போர்டு சபரிமலை வரும் பக்தர்களுடைய எண்ணிக்கையை ஒரு லட்சத்திற்குள் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இதன்படி 70 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 20 ஆயிரம் பேர் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளது. கூடுதலாக வரும் பக்தர்களுக்கு மறு நாளைக்கு தரிசனத்திற்கு ஸ்பாட் புக்கிங் செய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பம்பை, மர கூட்டம், சரங்கொத்தி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே பம்பைக்கு வரும் பக்தர்களுடைய எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க நிலக்கல்லில் பக்தர்களை தங்க வைக்க இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பம்பையில் ஏற்படும் கூட்டம் நெரிசலை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18-ம் படி வழியாக ஐயப்பன் பக்தர்கள் விரைவாக அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 200 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா..!! இதுல ஒரு கேங்ஸ்டர் இருக்காரு..!! யார் தெரியுமா..??