"அடித்தே கொலை"..! சபரிவர்மன் கொலை வழக்கு... சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!
சபரிவர்மன் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாராயணன்புதூர், ஈத்தங்காட்டைச் சேர்ந்த சபரிவர்மன் (34) என்பவர் மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜூலை 8 அன்று நாகர்கோவில் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை கைதியாக சிறையில் இருந்த சபரி வர்மன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை பார்ப்பதற்கு சென்றபோது போலீசார் அனுமதி மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சபரிவர்மனின் கை மற்றும் கால்களை லுங்கியால் கட்டிப்போட்டு கொடூரமாக அடித்துக் கொலை செய்தது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு.! பின்னணியில் சென்னை உயரதிகாரிகள்? பரபரப்பு விசாரணை!
மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வேண்டும் என சத்தம் போட்ட சபரி வர்மனை சிறை வார்டன் மற்றும் கைதிகள் இணைந்து அடித்துக் கொன்றதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இரவில் தூங்க முடியாத காரணத்தால் சிறை வார்டனிடம் மற்ற கைகள் புகார் தெரிவித்ததாகவும் கொடூரமான தாக்குதலில் சபரிவர்மன் இறந்ததாகவும் சிகிசிஐடி விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்... திமுக நிர்வாகி வீட்டிலும் சிபிசிஐடி சோதனை... பரபரப்பு..!!